Friday, June 19, 2009

உன் ஞாபகங்கள்...

பூட்டி விட்டு கண்களை இருக்க மூடிக் கொண்டு தான்
தூங்கினேன்அப்படி இருந்தும் உள்ளே புகுந்து உதைக்கின்றன உன்ஞாபகங்கள்... தூங்கத் துடிக்கிற ஒவ்வொரு இரவும் தூங்கவிடாமல்
உன் காதல் என்னை தட்டி தட்டி எழுப்பி கதைபேசுகிறது...





Vennila Thuli



காதல் ஒரு மனிதனுக்கு...

காதல் ஒரு மனிதனுக்கு
எத்தனை முறை வரும்?
அல்லது வரவேண்டும்?
எப்படி வரவேண்டும்?
ஏன் வரவேண்டும்?
எங்கு வரவேண்டும்?
எதற்கு வரவேண்டும்?
எப்பொழுதெல்லாம் வரவேண்டும்?
எனக்கு ஒரு முறை மட்டுமே வந்தது
என்னுயிர் காதலற்கு?
யாராவது...
இதைப் படிக்கும் யாராவது
நீங்கள்
வழக்கறிஞரா? வாத்தியாரா?
பொறியாளரா? மருத்துவரா?
கலைஞரா? இல்லை கவிஞரா?

யாராவது... யாராவது...
சரியான விடையைச் சொல்லுங்களேன்...
காத்திருக்கிறேன்...

வெண்ணிலா

எங்கிருந்தோ வந்து

எங்கிருந்தோ வந்து
என் இதயத்தை
திருடிச் சென்றாய்
எடுத்து சென்ற இதயத்தை
என்ன செய்தாய்?
என்னை நான் மறந்து விட்டேன்
உன்னை மட்டும் நினைக்கிறேன்
உன் சிரிப்பொலி கேட்டு
திடுக்கிட்டு கண் விழித்தால்
கண் எதிரே நீ இல்லை
அதனால் என்
கண்களிலே கண்ணீர்...

வெண்ணிலா

எங்கிருந்தோ வந்து

எங்கிருந்தோ வந்து
என் இதயத்தை
திருடிச் சென்றாய்
எடுத்து சென்ற இதயத்தை
என்ன செய்தாய்?
என்னை நான் மறந்து விட்டேன்
உன்னை மட்டும் நினைக்கிறேன்
உன் சிரிப்பொலி கேட்டு
திடுக்கிட்டு கண் விழித்தால்
கண் எதிரே நீ இல்லை
அதனால் என்
கண்களிலே கண்ணீர்...

வெண்ணிலா

நீ இன்றி

நீ இன்றி நானும் இல்லை..
என் காதல் பொய்யும் இல்லை..
வழி எங்கும் உந்தன் முகம் தான்...
வலி கூட இங்கே சுகம் தான்.

Vennila

உன் உறவினில்

உன் உறவினில் வாழ்ந்த நான்
உன் பிரிவினில் வாழ்ந்த நான்
உன் அன்பினில் வாழ்ந்த நான்
உன் துயரினில் வாழ்ந்த நான்
உன் காதலில் வாழ்ந்த நான்
உயிர் பிரிந்த பின்பும்
உனக்குள்ளே வாழ்வேன்
உருவம் இல்லா பொருளாக............

வெண்ணிலா

அவனையே நினைத்து

அவனையே நினைத்து கவிதை எழுதி
அவனிடம் கொடுதேன்
அதை பார்த்து விட்டு என்னிடம்
அவன் கேட்டான் நீ யாரை
காதலிக்கிறாய் என்று

நிரு

என் வாழ்க்கை இருக்கு

உன் அழகை ரசிக்க என் கண் இருக்கு
உன் அன்பில் வாழ என் இதயம் இருக்கு
உன் மூச்சில் வாழ என் உயிர் இருக்கு
உன்னை அணைக்க என் நெஞ்சு இருக்கு
உன் தலையை தடவ என் விரல் இருக்கு
மொத்ததில் உனக்காகவே என் வாழ்க்கை இருக்கு..

நிரு

உன்னை மறக்க

உன்னை மறக்க மறுக்கின்றது என் இதயம்
உறங்க மறுக்கின்றது என் விழிகள் ஆனால்
இப்போதெல்லாம் என் இரவுகள் கனவுகளில் அல்ல
கண்ணிரில் கரைந்து போகின்றன .
நான் நினைக்கும் போதெல்லாம் நீ வந்து விடுவாய்
என்று நினைத்து கொண்டுதான் என் நாட்கள் உருண்டோடிப்போகின்றன
ஆனாலும் என் உதடுகள் தினம் தினம் சொல்லிக் கொண்டே இருக்கின்றது
என் இதயம் கலங்குவதை உன் இதயம் தாங்காதென்று..

நிரு

நம்பி என் கரம்பிடித்த தேவதையே

நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்
நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே.

சுஜி

உன் காதல் வரவில்லையே?


காதல் வருமா? காலம் காத்திருந்தால்,
என்றாவது வசந்தம் வரும் பாலைவனம் பிரிந்தால்
எங்காவது சோலை வரும் கற்பனை செய்தால்
எப்போதாவது கவிதை வரும்
நான் என்ன செய்தும் உன் காதல் வரவில்லையே?

நிரு